search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ராமநாதபுரத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 100-க்கும் அதிகமான தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அரசு மருத்துவமனையில் வழக்கத்திற்கு மாறாக நோயாளிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    ராமநாதபுரம்:

    இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ துறைகளையும் ஒரே கலவையாக கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    அதன் முதல் கட்டமாக அலோபதி டாக்டர்கள் மட்டுமே செய்துவரும் அறுவை சிகிச்சைகளை இனி ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என நவம்பர் 19-ந்தேதி அரசிதழில் அறிவிக்கப்பட்டது.

    இது பொதுமக்களுக்கு பெரிதும் ஆபத்தை விளைவிக்கும் ஒன்றாகும். அறுவை சிகிச்சை செய்வதற்கு என்று ஆங்கில மருத்துவத்துறையில் டாக்டர்கள் தனிபடிப்பு படித்து, தேவையான செய்முறைப்பயிற்சியும் பெறுகின்றனர்.

    ஆனால் ஆயுர்வேத படிப்புகளில் அவ்வாறு தனிபடிப்பு மற்றும் செய்முறைப்பயிற்சி இல்லை. இந்த அறிவிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே, மருத்துவ துறைகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிடவேண்டும் என்று கடந்த 8-ந்தேதி டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் 11-ந்தேதி தனியார் மருத்துவமனை இயங்காது எனவும் அறிவித்தனர். இதையடுத்து இன்று காலை தனியார் மருத்துவமனையில் வெளிநோயாளிகள் யாருக்கும் சிகிச்சை அளிக்கப்படவில்லை.

    மருத்துவமனைக்கு வருகை புரிந்த நோயாளிகளிடம் வேலை நிறுத்தம் குறித்து வரவேற்பறையில் இருந்த செவிலியர்கள் விளக்கிக் கூறினர். இதையடுத்து நோயாளிகளும் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து திரும்பிச் சென்றனர்.

    அவசர மற்றும் கொரோனா சிகிச்சைகளுக்கு வந்த நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 100-க்கும் அதிகமான தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அரசு மருத்துவமனையில் வழக்கத்திற்கு மாறாக நோயாளிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதை தொடர்ந்து ராமநாதபுரம் ரோட்டரி மகாலில் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட கிளை தலைவர் டாக்டர் அரவிந்த்ராஜ் தலைமையில் நடந்தது.

    இதில் இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில கவுன்சில் உறுப்பினர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, அரசு மருத்துவர் சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் மலையரசு, நிதி செயலாளர் ஆக்நெல், ஒருங்கிணைப்பாளர் கலிலுர் ரகுமான், டாக்டர்கள் மன்சூர். சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அலோபதி டாக்டர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தினர்.
    Next Story
    ×