search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூலப்பொருட்கள்
    X
    மூலப்பொருட்கள்

    பின்னலாடை தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களின் இறக்குமதி அதிகரிப்பு

    கோடை கால ஆடை தயாரிப்பு மும்முரமாக திருப்பூரில் நடைபெற தொடங்கியுள்ளதால் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து கெமிக்கல் மற்றும் சாய விற்பனையாளர்கள் அவற்றை அதிகளவில் இறக்குமதி செய்து வருகிறார்கள்.
    திருப்பூர்:

    பின்னலாடை என்பது ஒரு மூலப்பொருட்கள் கொண்டு தயாரிப்பதில்லை. இதற்கு பல்வேறு மூலப்பொருட்கள் தேவைப்படுகிறது. இதில் ஒவ்வொரு மூலப்பொருட்களையும் பல்வேறு நாடுகளில் இருந்து தொழில்துறையினர் இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.

    இதன் பின்னரே ஆடை தயாரிப்பும் முழுமையடைகிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பது சாயம் ஆகும். நாம் விரும்பி தயாரிக்கும் ஆடைகள் மற்றும் வர்த்தகர்கள் விரும்பும் வண்ணங்களில் ஆடைகளுக்கு சாயமேற்றி கொடுக்கப்படுகிறது. இதற்காக சாயம் மற்றும் கெமிக்கல்கள் பல்வேறு நாடுகளில் இருந்து தொழில்துறையினர் இறக்குமதி செய்து வந்தனர்.

    கொரோனா பாதிப்பின் காரணமான வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக முக்கியமான மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்தது. இதற்கிடையே வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பு இயல்பு நிலைக்கு வந்ததை தொடர்ந்து, மீண்டும் சாயம், கெமிக்கல்கள் போன்றவற்றின் இறக்குமதி தொடர்ந்து நடைபெற்றது. இதற்கிடையே தற்போது கோடை கால ஆடை தயாரிப்பு மும்முரமாக திருப்பூரில் நடைபெற தொடங்கியுள்ளது. இதனால் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து கெமிக்கல் மற்றும் சாய விற்பனையாளர்கள் அவற்றை அதிகளவில் இறக்குமதி செய்து வருகிறார்கள். இதுபோல் நூல், துணிகள் உள்ளிட்ட முக்கியமான மூலப்பொருட்களின் இறக்குமதியும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    Next Story
    ×