search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்
    X
    வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்

    அதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

    தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 420 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

    இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 200 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. பாம்பனிலிருந்து 420 கி.மீ., குமரியிலிருந்து 600 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது.

    புரெவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியிருப்பதாவது:

    * ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×