search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    சபரிமலை செல்லும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழை 2 நாட்கள் பயன்படுத்தலாம்

    சபரிமலை செல்லும் பக்தர்கள் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் அந்த சான்றிதழை 2 நாட்களுக்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க அந்த மாநில அரசு வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    மேலும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் சாமி தரிசனநேரத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக பெறப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் நோய் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இந்த கட்டுப்பாடுகளால் பல்வேறு நடைமுறை சிக்கல்களும் ஏற்படுகின்றன. பொதுவாக அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யும் போது அதற்கான முடிவுகள் ஒருநாள் கழித்தே கிடைக்கிறது.

    அதன்பிறகு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்கு செல்ல ஓரிரு நாட்கள் ஆகிறது. இதுதான் நிலைமை என்றிருக்க கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியான 24 மணிநேரத்துக்குள் சாமி தரிசனம் செய்வது என்பது இயலாத வி‌ஷயம் என்று பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

    தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பரிசோதனை முடிவுகள் முன்பை காட்டிலும் மிக விரைவாக அளிக்கப்படுகின்றன. பெரும்பாலான இடங்களில் ஒரேநாளில் முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன. அதை கருத்தில் கொண்டு அய்யப்ப பக்தர்கள் கொரோனா பரிசோதனையை ஆய்வகங்களில் செய்து கொள்ளலாம்.

    அதில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் அந்த சான்றிதழை 2 நாட்களுக்கு பயன்படுத்தலாம். தேவைப்படும் பட்சத்தில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கங்களும் அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×