search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஒரே ஆண்டில் புகை பழக்கத்தால் 10 லட்சம் பேர் பலி - இதில் பெண்களும் உண்டு என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல்

    புகை பழக்கத்தால் ஒரே ஆண்டில் நம் நாட்டில் மட்டும் 9 லட்சத்து 32 ஆயிரத்து 711 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    சென்னை:

    பகையால் கொல்லப்பட்ட உயிர்களை விட புகையால் கொல்லப்பட்டவர்கள் அதிகம் என்றால் நம்ப முடிகிறதா?

    நம்பித்தான் ஆக வேண்டும். அதுதான் உண்மையும்கூட. புகை பழக்கத்தால் ஒரே ஆண்டில் நம் நாட்டில் மட்டும் 9 லட்சத்து 32 ஆயிரத்து 711 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

    இங்கிலாந்தை சேர்ந்த பொதுசுகாதார ஆய்வு நிறுவனம் ஒன்று உலக சுகாதார அமைப்பின் தரவுகளை அடிப்படையாக வைத்து உலகம் முழுவதும் நடத்திய ஆய்வு முடிவில்தான் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

    அதிலும் பலியானவர்களில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 267 பேர் பெண்கள் என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல்.

    ஆணென்ன பெண்ணென்ன எல்லாம் ஓரினம் தான்! ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம் என்பதை இந்த மாதிரி விசயத்திலுமா வெளிப்படுத்துவது?

    நாடு முழுவதும் சுமார் 12 கோடி பேர் புகை மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் 75 சதவீதம் பேர் புகைப்பழக்கத்துக்கு அடிமைகளாகவே மாறி விட்டார்கள்.

    புகை உயிருக்கு பகை. புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு. புகையிலை பழக்கம் புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற விழிப்புணர்வு பிரசாரம் எல்லாம் முனைமழுங்கி போய் விட்டது.

    2000-வது ஆண்டுகளில் புகை பழக்கம் கட்டுப்பாடு 32 சதவீதம் பேரிடம் ஏற்பட்டது. ஆனால் 2015-ம் ஆண்டில் அது 21 சதவீதமாக குறைந்துவிட்டது. அதேபோல்தான் பெண்கள் மத்தியிலும் இந்த சதவீதம் 2000-வது ஆண்டில் 6 சதவீதமாக இருந்தது. 2015-ம் ஆண்டில் 2 சதவீதமாக குறைந்துபோனது.

    உலக அளவில் நிகழும் சிறுவயது மரணங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது புகை பழக்கமாகவே உள்ளது.

    மலேரியா, காசநோய் ஆகியவற்றால் ஏற்படும் மரணங்களைவிட 3 மடங்கு அதிகமாக புகையிலை பழக்கத்தால் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.

    புகை பழக்கத்தை கட்டுப்படுத்தினால் 50 சதவீதம் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் தடுக்கப்படும்.

    உலகம் முழுவதும் புகை பழக்கத்துக்கு ஆளாகி இருக்கும் சுமார் 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் சாதாரண அடித்தட்டு மக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×