search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகை பழக்கம்"

    • புகை பிடிப்பதால், இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் மரணங்கள் நிகழ்கின்றன.
    • பக்கத்தில் இருந்து புகையை சுவாசிப்பவர்களில் 2 லட்சம் பேர் இறக்கிறார்கள்.

    புதுடெல்லி :

    தேசிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட முதன்மை விசாரணை அதிகாரியும், பிரபல தொற்றுநோயியல் நிபுணருமான நரேஷ் புரோகித் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    அதிகமாக புகையிலை பயன்படுத்துபவர்களில் உலக அளவில் 2-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இங்கு 26 கோடியே 80 லட்சம்பேர் புகையிலை பயன்படுத்துகிறார்கள்.

    இளைஞர்களும், படிப்பறிவு இல்லாதவர்களும் பீடி, ஹூக்காவுக்கு பதிலாக சிகரெட்டுக்கு மாறிவிட்டார்கள். மேல்தட்டு மக்கள், சிகரெட்டுக்கு பதிலாக சிகாருக்கு மாறிவிட்டார்கள். ஆனால், சிகாரில், புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் அதிகமாக இருக்கிறது.

    இந்தியாவில், தினமும் 5 ஆயிரத்து 500 குழந்தைகள், புகையிலை பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்கள். அவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர், புற்றுநோய், மாரடைப்பு, மூளை பக்கவாதம், ஆஸ்துமா போன்ற பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பிறர் புகைக்கும்போது, பக்கத்தில் இருந்து புகையை சுவாசிப்பவர்களுக்கும் அதே தீங்கு ஏற்படும். அவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படும். குழந்தைகளுக்கு சுவாச தொற்று ஏற்படும்.

    ஓட்டல், உணவகம், விமான நிலையம் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் புகை பிடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த பகுதிகளை ரத்து செய்து, பொது இடங்களில் 100 சதவீத தடை விதிக்க வேண்டும். அப்போதுதான், பாதிப்புகளை குறைக்க முடியும்.

    புகை பிடிப்பதால், இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் மரணங்கள் நிகழ்கின்றன. பக்கத்தில் இருந்து புகையை சுவாசிப்பவர்களில் 2 லட்சம் பேர் இறக்கிறார்கள். புகையில்லா புகையிலையை பயன்படுத்துவதால், 35 ஆயிரம்பேர் பலியாகிறார்கள்.

    இந்தியாவில் புற்றுநோய் மரணங்களில் 27 சதவீத மரணங்கள், புகையிலை பயன்பாட்டால் ஏற்படுகின்றன. புகையிலையில் இருந்து உருவாகும் புகையில் புற்றுநோயை உருவாக்கும் 80 காரணிகள் இருக்கின்றன. பெண்களுக்கு கூட புகையிலை பழக்கத்தால், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஏற்படுகின்றன. புகை பழக்கத்தை விட முடியாதவர்கள், மனநல ஆலோசகரை அணுகினால் பலன் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பீடி பற்ற வைத்துள்ளார். பின்னர் அதனை அணைக்காமல் தூக்கி போட்டதாக கூறப்படுகிறது.
    • துரைசாமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் என்.தாசிரிபள்ளியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 85). விவசாயி. இவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

    நொடிக்கொருமுறை பீடி பற்ற வைத்தவாறே இருப்பாராம். கடந்த 26-ந்தேதி அதிகாலை எழுந்த துரைசாமி வழக்கம்போல பீடி பற்ற வைத்துள்ளார்.

    பின்னர் அதனை அணைக்காமல் தூக்கி போட்டதாக கூறப்படுகிறது. அந்த பீடியில் இருந்த தீக்கங்கு அருகே கிடந்த தென்னை ஓலைகளில் பற்றி துரைசாமி மீதும் தீப்பற்றியது.

    இதில் உடல் கருகிய நிலையில் கிடந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த துரைசாமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து வேப்பனபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மக்களிடம் புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
    • நியூசிலாந்தை 2025-ம் ஆண்டுக்குள் புகைப்பிடிக்காத நாடாக மாற்ற இலக்கை.

    வெல்லிங்டன் :

    2025-ம் ஆண்டுக்குள் நியூசிலாந்தை புகைப்பிடிக்காத நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை அந்த நாட்டு அரசு கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மக்களிடம் புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் நியூசிலாந்தில் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கு வாழ்நாள் தடை விதிக்கும் புதிய சட்டத்தை அந்த நாட்டு அரசு நேற்று முன்தினம் நிறைவேற்றியது.

    ஜனவரி 1, 2009 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகையிலை விற்கக் கூடாது என்று அந்த சட்டம் கூறுகிறது. இதன் மூலம் சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

    அதாவது, நியூசிலாந்தில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு பிறகு சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 63 ஆக இருக்கும் என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்கு முன்பாகவே புகைபிடிக்கும் பழக்கம் மறைந்துவிடும் என்று சுகாதார அதிகாரிகள் நம்புகின்றனர்.

    இந்த புதிய சட்டம் நாட்டில் புகையிலை விற்க அனுமதிக்கப்படும் சில்லறை விற்பனையாளர்களின் எண்ணிக்கையை சுமார் 6,000ல் இருந்து 600 ஆக குறைக்கிறது. மேலும் புகையிலையில் அனுமதிக்கப்பட்ட நிகோடின் அளவை குறைக்கவும் வழிவகை செய்கிறது.

    • நியூசிலாந்தில் 14 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்பிடிக்க தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.
    • புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்கான சட்டம் நியூசிலாந்தை விட இந்தியாவுக்கு தான் அதிகம் தேவை.

    சென்னை :

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    நியூசிலாந்தில் 2009-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள், அதாவது 14 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்பிடிக்கவும், அவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்கவும் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. உலகில் இத்தகைய சட்டத்தை இயற்றிய முதல் நாடு நியூசிலாந்து தான்.

    நியூசிலாந்து நாட்டின் சட்டத்தால் புகைப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு குறையும். 2050-ம் ஆண்டில் 40 வயதானவர்களால் கூட புகைக்க முடியாது. 2023-ம் ஆண்டு இறுதிக்குள் நியூசிலாந்தில் சிகரெட் விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கை 6 ஆயிரத்தில் இருந்து 600 ஆக குறைக்கப்படும். புகைப்பிடிப்போர் எண்ணிக்கை குறைவதால், நியூசிலாந்து மக்களின் மருத்துவத்துக்காக செலவிடப்படும் தொகை ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி (5 பில்லியன் டாலர்) குறையும்.

    ஒரு சட்டத்தால் இவற்றை விட பெரிய நன்மையை ஒரு நாட்டுக்கு செய்து விடமுடியாது. அதனால் தான் இது வரலாற்று சிறப்புமிக்க சட்டம். புகைப்பழக்கத்தை படிப்படியாக ஒழிப்பதற்கான சட்டம் நியூசிலாந்தை விட இந்தியாவுக்கு தான் அதிகம் தேவை. எனவே, இந்தியாவில் புகைப் பிடிப்பதற்கான வயதை 21 ஆக உயர்த்த வேண்டும். 2001-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்க தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • புகைப்பிடிப்பவருக்கு ஏற்படும் இருமல் அந்த பழக்கத்தை கைவிடும் வரை தீராது.
    • மற்ற நேரங்களை விட காலை வேளையில் இருமல் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

    புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகுபவர்கள் நுரையீரல் சார்ந்த நோய் பாதிப்புகளால் வேதனையை அனுபவிக்கிறார்கள்.

    அதில் இருந்து மீள முடியாத நிலை தொடரும்போது நுரையீரல் புற்றுநோய் உருவாகலாம். இருமல், ஆஸ்துமா, நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவை புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் ஆரம்பகால பிரச்சினைகளாகும். அதன் முதல் அறிகுறி இருமலாகும். சாதாரண இருமலுக்கும், புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானவர்களுக்கு ஏற்படும் இருமலுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

    சாதாரண இருமல் சில நாட்களில் சீராகிவிடும். ஆனால் புகைப்பிடிப்பவருக்கு ஏற்படும் இருமல் அந்த பழக்கத்தை கைவிடும் வரை தீராது. மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

    புகைப்பிடிப்பவர்கள் மட்டுமல்ல, மற்றவர்கள் வேறு வகையில் நிகோடினையோ, புகையிலை பொருட்களையோ நுகர்ந்தால் அதுவும் இருமலை தூண்டக்கூடும். புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட அனைவருக்கும் வெவ்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும். இறுதியில் சளியில் ரத்தமும் வெளிப்படும். அதற்கான சிகிச்சை பெறாவிட்டால் இருமல் தீவிரமடைய தொடங்கிவிடும்.

    அதன் தாக்கமாக நெஞ்சுவலி, தொண்டை வலி, சுவாச கோளாறு, மூச்சு திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். மற்ற நேரங்களை விட காலை வேளையில் இருமல் பாதிப்பு அதிகமாக இருக்கும். அப்போது உடலில் நீர்ச்சத்து அளவை சீராக பராமரிக்க வேண்டும். தேனுடன் வெதுவெதுப்பான நீரை பருகி வரலாம்.

    காலை வேளையில் சுவாச பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இருமல் குறைவதற்கு நீராவியை பயன்படுத்தலாம். நிரந்தரமாக நோய் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கு புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதுதான் சிறந்தது.

    • பொது இடங்களில் புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதால் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
    • முதன்முறையாக ரூ.100 மீண்டும், அதே குற்றம் தொடர்ந்தால் ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுஇடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறையினர் களத்தில் இறங்கி கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொது இடங்களில் புகைப்பி டித்தலோ, புகை யிலை சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்தல் தண்ட னைக்குரிய குற்றமாகும். அரசு அலுவலர்களின் ஆய்வின்போது கண்டறியப்பட்டாலோ, உறுதி செய்யப்பட்டாலோ உடனடி அபராதமாக முதன்முறையாக ரூ.100. மீண்டும், அதே குற்றம் தொடர்ந்தால் ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்படும்.

    மேலும் தொடர்ந்தால் மூன்று மாதம் வரை ஜெயில் தண்டனையுடன் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.இவ்வாறு சட்டம் இருப்பது குறித்த விழப்புணர்வை சுகாதார துறையினர் ஏற்படுத்துவதில்லை. சில இடங்களில் போலீ சாருடன் சேர்ந்து அபராத நடவடிக்கைகளை எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது.

    இவ்விஷயத்தில் அரசு சார்பில் தீவிர நடவடிக்கை இல்லாததால் டீக்கடை, பொது இடங்களில் பலரும் புகைக்கின்றனர். புகைப்பவரை காட்டிலும் அவரின் அருகில் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் அதிக பாதிப்பிற்குள்ளாவதாக மருத்துவ ஆய்வுகள் தெரி விக்கின்றன.நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய், டி.பி., மாரடைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு ஒரு காரணியாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது. உலகில் ஆண்டுதோறும் 50 லட்சம் பேர் புகையிலை பயன்பாட்டினால் உயிரிழக்கின்றனர்.

    பொது இடங்களில் புகைப்பது, உமிழ்வது போன்ற பழக்கங்களை ஒழிக்க அரசு சார்பில் கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அப்போது தான் ஒரே நாளில் இல்லாவிடினும் கால போக்கில் பொதுமக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை திரை யரங்குகள், பஸ்களில் உள்புறமாக புகைபிடிப்பது சாதாரண விஷயமாக இருந்தது. பொது இடங்களில் புகைப்பது தண்டனைக்குரிய குற்றம் என அரசு தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின், தற்போது தியேட்டர், பஸ்க ளில் புகைப்பதை காண்பது அரிதான காட்சியாக மாறியது.

    பொது இடங்களில் புகைப்போர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கையில் இறங்கினர். இதனால் பொது இடங்களில் புகைக்கும் பழக்கம் குறைந்திருந்தது. சில ஆண்டுகளாக அறவே நடவடிக்கை இல்லாததால் மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமல் பொது இடங்களில் புகைப்போர் அதிகரித்துள்ளனர்.

    மாவட்ட கலெக்டர் தீவிர நடவடிக்கை எடுத்து புகை பிடிப்போருக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×