search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    மேட்டூர்:

    காவிரி டெல்டா பாசன பகுதிகளில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்தது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 23-ந் தேதி முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாசன பகுதிகளில் பெய்து வரும் மழை நின்றதால் பாசனத்துக்கான தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக நேற்று மதியம் முதல் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியில் இருந்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு நீர்வரத்து குறைந்து வரும் நிலையில் அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரத்து 900 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 333 கனஅடியாக இருந்தது. தண்ணீர் திறப்பை விட அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் குறையத்தொடங்கியுள்ளது. நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.73 அடியாக இருந்தது.
    Next Story
    ×