search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    ரெயில்வேயிடம் குறைந்தபட்ச மின் கட்டணம் வசூலிக்க வேண்டும்- மின்சார கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    ரெயில்வேயிடம் குறைந்தபட்ச மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மின்சார கழகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் கடைசி வாரம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் ரெயில்கள், பஸ்கள் என பொதுபோக்குவரத்து இயங்கவில்லை. இந்த நிலையில் உயர் அழுத்த மின் கட்டணத்தை முழுமையாக செலுத்தும்படி தெற்கு ரெயில்வே நிர்வாகத்தை தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவுறுத்தி உள்ளது. அதாவது, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 8 மாவட்ட மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சூப்பிரண்டுகள், உயர் அழுத்த மின் கட்டணம் செலுத்த தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தெற்கு ரெயில்வே நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. அதில், ‘ஊரடங்கு நேரத்தில் ரெயில்கள் இயக்கப்படவில்லை. எனவே, குறைந்தபட்ச கட்டணமான 20 சதவீதத்தை வசூலிக்க மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ், “இதே கோரிக்கையுடன் ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த இந்த ஐகோர்ட்டு, ஊரடங்கு முடியும் வரை குறைந்தபட்ச கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவு இந்த வழக்கிற்கும் பொருந்தும். தெற்கு ரெயில்வே நிர்வாகத்திடம் இருந்து, குறைந்தபட்ச கட்டணமே வசூலிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
    Next Story
    ×