search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பள்ளிப்பட்டில் விடுதியில் தங்கியிருந்த 3 பேர் கைது - ஐம்பொன் சிலைகள் பறிமுதல்

    பள்ளிப்பட்டு அருகே உள்ள விடுதியில் தங்கியிருந்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்தனர்.
    பள்ளிப்பட்டு:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரிரோடு, சோளிங்கர் ரோடு, பஸ் நிலையம் ரோடு போன்ற மும்முனை சாலை சந்திப்பில் ஒரு தனியார் விடுதி உள்ளது. இந்த விடுதியில் நேற்று மாலை பள்ளிப்பட்டு போலீசார் திடீரென்று சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் 3 பேர் தங்கியிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் அவர்களிடம் இருந்த பொருட்களை சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து ஒரு அம்மன் சிலை, மரகத கல் பதித்த நாகலிங்க சிலை, சிறிய வடிவில் அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட பொருளை பறிமுதல் செய்தனர். அவை ஐம்பொன்னால் ஆனவை என்று கூறப்படுகிறது.

    விடுதியில் தங்கி இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த மாடசாமி, கறுப்பசாமி மற்றும் ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்த முரளி என்பது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×