search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை
    X
    சபரிமலை

    சபரிமலை கோவில் 16-ந்தேதி முதல் ஐந்து நாட்கள் திறப்பு: எத்தனை பேருக்கு அனுமதி?

    மலையாள மாதமான துலாம் மாதத்தை முன்னிட்டு நாளைமறுதினம் முதல் ஐந்து நாட்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் பூஜைக்காக திறக்கப்படுகிறது.
    கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்படும்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் மலையாள மாதமான துலாம் மாதத்தை முன்னிட்டு நாளைமறுதினம் (அக்டோபர் 16-ந்தேதி) முதல் ஐந்து நாட்கள் சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட்டு பூஜை நடத்தப்பட இருக்கிறது. அப்போது ஒரு நாளைக்கு 250 பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஆன்லைன் முன்பதிவு வசிதி உண்டு. முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி, கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என தேவசனம் போர்டு அறிவித்துள்ளது.
    Next Story
    ×