search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    ஊத்துக்குளியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    பேரூராட்சிகளில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் வழங்க கோரி ஊத்துக்குளி பேரூராட்சி முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஊத்துக்குளி:

    பேரூராட்சிகளில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் வழங்க கோரி ஊத்துக்குளி பேரூராட்சி முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊத்துக்குளி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க தாலுகா பொருளாளர் ராமசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் கே.சரஸ்வதி, ஆகியோர் பேசினார்கள். தமிழகத்தில் கொரானா பாதிப்பிற்கு பின்பு நகர்புறத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளர்கள் பெருமளவு வேலை வாய்ப்பின்றி வருமானம் இன்றி கஷ்டப்பட்டு வருகிறார்கள். புதிய வேலைவாய்ப்பு தேடி வேறு இடங்களுக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு அமைத்த பொருளாதார மேம்பாட்டுக்கான ரங்கராஜன் குழு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.ஆகவே தமிழக அரசு உடனே பேரூராட்சி பகுதிகளில் உள்ள கூலித் தொழிலாளர்களுக்கு நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை தொடங்கி வேலை வழங்க வேண்டும். வருடத்திற்கு 200 நாள் வேலையும் ரூ.600 தினக்கூலி வழங்கவேண்டும். கொரோனா கால நிவாரணமாக குடும்பத்திற்கு ரூ.7,500 வழங்க வேண்டும். 60 வயதை கடந்த அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி செயல் அலுவலர் மூலமாக மாவட்ட கலெக்டருக்கும், தமிழக முதல்-அமைச்சருக்கும் மனுக்கள் வழங்கப்பட்டது.
    Next Story
    ×