search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குளித்தலை பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கிய 3 பேர் கைது

    குளித்தலை பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    குளித்தலை:

    குளித்தலை பஸ் நிலையம், குளித்தலை அருகே உள்ள சத்தியமங்கலம், பணிக்கம்பட்டி சந்தை ஆகிய பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் குளித்தலை பஸ் நிலையம் எதிரே உள்ள மளிகை கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    அதனைத்தொடர்ந்து கடையின் உரிமையாளரான குளித்தலை பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த கணேசன் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது கடையில் இருந்த ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல, குளித்தலை அருகே உள்ள சத்தியமங்கலம் நடுத்தெரு பகுதியை சேர்ந்த பிச்சை (65) என்பவர் தனது வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த ரூ.19 ஆயிரத்து 860 மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு அவரையும் கைது செய்தனர்.

    மேலும் குளித்தலை அருகே உள்ள பணிக்கம்பட்டி சந்தை பகுதியில் தனது மளிகை கடையில் ரூ.750 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அந்த கடையின் உரிமையாளரான முத்துகிருஷ்ணன் (65) என்பவரை போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் தரகம்பட்டி பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. போலீசாரின் இந்த தொடர் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    Next Story
    ×