
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:
திரையரங்கு உரிமையாளர்கள் இன்று காலையில் என்னை நேரில் சந்தித்தனர்.
திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து மத்திய அரசிடம் இருந்து முழுமையான வழிகாட்டு நெறிமுறைகள் வரவில்லை. மத்திய அரசின் வழிகாட்டுதல், மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுறுத்தல்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.