search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மேட்டூரில் முக கவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம்

    மேட்டூர் நகராட்சி எல்லைப் பகுதிக்குள் முக கவசம் அணியாத பயணிகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
    மேட்டூர்:

    மேட்டூர் நகராட்சி பகுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நகராட்சி எல்லைப் பகுதிக்குள் நுழைபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்பதை நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக மேட்டூர் போலீசாருடன், நகராட்சி ஊழியர்கள் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக மேட்டூர் குள்ளவீரன் பட்டி பகுதி வழியாக மேட்டூருக்குள் நுழைபவர்கள் முக கவசம் அணிந்து வருகிறார்களா? என கண்காணிக்கப்படுகிறது. 

    மேலும் முக கவசம் இன்றி வருபவர்களிடம் அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் முக கவசம் அணிந்து உள்ளார்களா? என்பதையும் கண்காணித்து வருகின்றனர். இதற்காக குள்ள வீரன் பட்டி வழியாக வரும் பஸ்களை நிறுத்தி சோதனை செய்யும் நகராட்சி பணியாளர்கள், பயணிகள் யாராவது முக கவசம் அணியாமல் இருந்தால் அவர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்த நடவடிக்கை கார் மற்றும் லாரி போன்ற வாகனங்களில் வருபவர்களிடமும் மேற்கொள்ளப்படுகிறது.

    Next Story
    ×