search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விநாயகர் சிலைகள்
    X
    விநாயகர் சிலைகள்

    விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சரக காவல் துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் வாணியம்பாடியில் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம் தலைமையில் நடந்தது.
    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சரக காவல் துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் வாணியம்பாடியில் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம் தலைமையில் நடந்தது. டவுன் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வரவேற்றார். கூட்டத்தில் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், காவலூர், திம்மாபேட்டை, அம்பலூர் பகுதிகளில் இருந்து இந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் கலந்து கொண்டனர். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும், கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாலும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளள்ளதாக துணைபோலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

    பின்னர் பேசிய பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் சிவபிரகாசம் மற்றும் பல்வேறு நபர்கள் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்தவும், ஊர்வலம் நடத்தவும் அனுமதிக்க வேண்டுமென பேசினர். திடீரென அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய துணைபோலீஸ் சூப்பிரண்டு தங்களின் கோரிக்கைகள் அரசுக்கு தெரிவிக்கப்படும், தற்போது அரசு வழிகாட்டுதலை நிறைவேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுமென கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் ராமநாயக்கன் பேட்டை முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ஆர்.ஆர்.வாசு, சிவபிரகாசம், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் விட்டால், நிர்வாகி கிரி, திருப்பத்தூர் மாவட்ட இந்துமுன்னணி நிர்வாகி முருகன், நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் நாகபூசனம் நன்றி கூறினார்.
    Next Story
    ×