search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை முதல்வர் பன்னீர்செல்வம்
    X
    துணை முதல்வர் பன்னீர்செல்வம்

    பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை - உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் வரவேற்பு

    பூர்வீக சொத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமஉரிமை உண்டு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
    உச்சநீதிமன்றத்தில் 2005 இந்து வாரிசு சட்டத்திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இன்று அளித்த தீர்ப்பில்,

    ‘‘திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின்படி மகனை போன்று மகளும் சொத்தின் சம பங்கை பெறும் உரிமை உள்ளது.  சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்துதாரர் இறந்திருந்தாலும் பெண்ணுக்கு சம பங்கு பெறும் உரிமை உள்ளது’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    பெற்றோரின் சொத்தைப் பிரித்து பங்கு வழங்கும் போது ஆண் பிள்ளைகளைப் போலவே பெண்களுக்கும் சம பங்கு வழங்க வேண்டும் என்று 2005, இந்து வாரிசு உரிமை சட்டம் வழிவகை செய்கிறது, அதே சமயம் இந்த சட்டம் இயற்றப்படுவதற்கு முந்தைய காலக் கட்டத்துக்கும் பொருந்தும் என தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.  பூர்வீக சொத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமஉரிமை உண்டு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தான் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.   உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பின் மூலம் சமூகநீதி நிலைநாட்டப்பட்டதுடன், பெண்கள் முன்னேற்றத்திற்கு வலுசேர்ப்பதாக இந்த தீர்ப்பு அமையும் எனவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின்  வரவேற்பு தெரிவித்துள்ளனர். 
    Next Story
    ×