என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவினாசி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
Byமாலை மலர்9 Aug 2020 6:13 PM GMT (Updated: 9 Aug 2020 6:13 PM GMT)
அவினாசி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசி:
திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 47). இவர் கோவையிலுள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரும் இவரது மனைவி விஜயலட்சுமி (37) இருவரும் மோட்டார் சைக்கிளில் அரூரில் இருந்து திருப்பூர் வந்து கொண்டிருந்தனர். அவினாசி கைகாட்டி அருகே வந்த போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் வெங்கடேசன் மோட்டார் சைக்கிளை முந்திச்சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக வெங்கடேசனின் மனைவி விஜயலட்சுமி மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி ரோட்டில் விழுந்தார். இதில் அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விஜயலட்சுமி ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story
×