search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்கப்பட்ட செல்போனை அதன் உரிமையாளரிடம் போலீஸ் சூப்பிரண்டு துரை ஒப்படைத்தபோது எடுத்தபடம்.
    X
    மீட்கப்பட்ட செல்போனை அதன் உரிமையாளரிடம் போலீஸ் சூப்பிரண்டு துரை ஒப்படைத்தபோது எடுத்தபடம்.

    திருவாரூர் மாவட்டத்தில் காணாமல் போன ரூ.18 லட்சம் செல்போன்கள் மீட்பு

    திருவாரூர் மாவட்டத்தில் காணாமல் போன ரூ.18 லட்சம் மதிப்பிலான 111 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு துரை ஒப்படைத்தார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் காணாமல் போனது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு புகார்கள் பெறப்பட்டன. இந்த செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்க திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பி்ரண்டு துரை உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து சைபர் செல் பிரிவு மூலம் தொடர் விசாரணை நடைபெற்றது. அதில் முதல் கட்டமாக ரூ.20 லட்சம் மதிப்புள்ள 154 செல்போன்கள் மீட்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து நடப்பு ஆண்டில் காணாமல் போன செல்போன் தொடர்பான புகார்கள் பேரில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி செல்போன்களை மீட்டனர்.

    இந்தநிலையில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பி்ரண்டு துரை மீட்கப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்புள்ள 111 செல்போன்களை அதன் உரிமையாளர்களை நேரி்ல் அழைத்து ஒப்படைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் சைபர் செல் பிரிவு நவீனமயமாக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு துரித நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும். இந்த குற்றங்களை தடுக்க பொதுமக்கள் அதிக விழிப்புடன் செயல்பட வேண்டும். அனைவரின் முகநூல், வாட்ஸ்-அப், டூவிட்டர், இன்ஸ்டாகிராம், இதர செயலிகள் அனைத்தும் திருவாரூர் மாவட்ட சைபர் செல் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவதூறு செய்திகள் வெளியிடுதல் மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சைபர் செல் பிரிவு மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×