search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களை நாமக்கல் மாவட்ட வன அலுவலர் காஞ்சனா பார்வையிட்டபோது எடுத்த படம்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களை நாமக்கல் மாவட்ட வன அலுவலர் காஞ்சனா பார்வையிட்டபோது எடுத்த படம்.

    திருச்செங்கோடு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த யானை தந்தங்கள் பறிமுதல்

    திருச்செங்கோடு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 யானை தந்தங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சட்டையம்புதூர் பகுதியில் ஒரு வீட்டில் யானை தந்தங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக திருச்செங்கோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சட்டையம்புதூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வீடு, வீடாக போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சதீஷ்குமார் (வயது 35) என்பவரின் வீட்டில் சுமார் 3 கிலோ எடை கொண்ட 2 யானை தந்தங்கள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள இந்த தந்தங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்களோடு சதீஷ்குமாரை மாவட்ட வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். சதீஷ்குமார் மற்றும் அவருடன் தொடர்பு உடைய விஜி ஆகியோரிடம் நாமக்கல்லில் உள்ள வனச்சரக அலுவலகத்தில் மாவட்ட வன அலுவலர் காஞ்சனா தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்செங்கோடு அருகே ஒரு வீட்டில் 2 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த தந்தங்கள் எங்கிருந்து, யாரிடம் பெறப்பட்டது என்பது குறித்து இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விசாரணை முடிந்த பின் தவறு செய்தவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×