என் மலர்

  செய்திகள்

  மருத்துவ முகாம்
  X
  மருத்துவ முகாம்

  தோகைமலையில் மருத்துவ முகாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தோகைமலையில் வட்டார மருத்துவர் தியாகராஜன் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மாத்திரைகள் வழங்கப்பட்டது.
  தோகைமலை:

  தோகைமலை வேதாச்சலபுரம் தெருவில் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தோகைமலையில் உள்ள அனைத்து வணிகர்களும் தாமாக முன்வந்து நேற்று முதல் வரும் 31-ந்தேதி வரை தினமும் மதியம் 12 மணிக்குமேல் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவித்தனர். அதன்படி நேற்று பகல் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. இதனால் தோகைமலை பகுதி பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

  இதேபோல், தோகைமலை ஒன்றியம் கீழவெளியூர் காமராஜ் நகரில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மேற்கண்ட பகுதிகள் மற்றும் தோகைமலையில், வட்டார மருத்துவர் தியாகராஜன் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மாத்திரைகள் வழங்கப்பட்டது.
  Next Story
  ×