search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் தட்டுப்பாடு
    X
    குடிநீர் தட்டுப்பாடு

    ஒகேனக்கல் குடிநீர் வழங்ககோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் போராட்டம்

    ஒகேனக்கல் குடிநீர் வழங்ககோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நல்லம்பள்ளி:

    தர்மபுரி மாவட்டம் சிவாடி ஊராட்சிக்குட்பட்ட கந்துகால்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 1200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் இங்குள்ள ரெயில்வே கேட் பகுதியில் சுரங்கபாதை அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிக்காக துண்டிக்கப்பட்ட ஒகேனக்கல் குடிநீர் குழாய்கள் மீண்டும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்த நிலையில் ஒகேனக்கல் குடிநீர் குழாயை சீரமைத்து அந்த பகுதிக்கு மீண்டும் குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று கந்துகால்பட்டியில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி தலைவர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று குடிநீர் குழாய்களை சீரமைக்க உரிய நடிவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
    Next Story
    ×