search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனித உரிமைகள் ஆணையம்
    X
    மனித உரிமைகள் ஆணையம்

    சாத்தான்குளம் வழக்கு- இரண்டாவது நாளாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

    சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைய துணை சூப்பிரெண்டு இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடத்தினார்.
    தூத்துக்குடி:

    சாத்தான்குளத்தில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் அடைந்தது தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 10 போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் போலீஸ் ஏட்டு ரேவதி முக்கிய சாட்சியாக உள்ளார்.

    இந்த சம்பவம் நடந்த அன்றே மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து உள்துறை செயலாளருக்கும், சிறைத்துறை டி.ஜி.பி.-க்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். 

    இந்த நிலையில் மாநில மனித உரிமை ஆணைய துணை சூப்பிரண்டு குமார் நேற்று மாலையில் சாத்தான்குளத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். ஜெயராஜ் குடும்பத்தினர், பென்னிக்ஸ் நண்பர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் சாத்தான்குளம் பஜார் பகுதிக்கு சென்று, அங்கு உள்ள பென்னிக்ஸ் கடையை பார்வையிட்டார்.

    இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று தூத்துக்குடியில் வைத்து மனித உரிமைகள் ஆணைய துணை சூப்பிரெண்டு குமார் விசாரணை நடத்தினார். மருத்துவர்கள் வினிலா, வெங்கடேஷ் மற்றும் கோவில்பட்டி சிறை கண்காணிப்பாளர் சங்கர், தற்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

    மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரனிடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த பின் மனித உரிமை ஆணையம் தங்களது நடவடிக்கையை எடுக்கும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×