என் மலர்

  செய்திகள்

  நகை பறிப்பு
  X
  நகை பறிப்பு

  திங்கள்சந்தையில் மூதாட்டியிடம் 2½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திங்கள்சந்தையில் மூதாட்டியிடம் 2½ பவுன் தங்க சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  அழகியமண்டபம்:

  திங்கள்சந்தை மேக்கோடு, பலவண்டான்கோணம் பகுதியை சேர்ந்தவர் பகவதியம்மாள் (வயது 75). இவர் நேற்று காலை வீட்டின் முன் வாசலை சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்து கொண்டு இருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் கண் இமைக்கும் நேரத்தில் பகவதியம்மாள் கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று மறைந்தான். இதுபற்றி இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது.

  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி, சங்கிலி பறித்து சென்றவனின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
  Next Story
  ×