search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி நகை பறிப்பு"

    • திருச்சியில் பதுங்கி இருந்த கலையரசனை நகர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    • நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்தவர் சேகர்.இவரது மனைவி ராணி (வயது 62). இவர் கடந்த 19ந் தேதி கிழக்கு கோவிந்தாபுரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மூதாட்டி ராணியிடம் 2½ பவுன் செயினை பறித்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இது குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீசில் ராணி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து மூதாட்டியிடம் செயினை பறித்துச் சென்ற நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி.கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில், நகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் எட்வர்டு, தலைமை காவலர்கள் முகம்மது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் இணைந்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ராணியின் செயினை மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பறித்துச் செல்வது போலீசாருக்கு தெரியவந்தது. அந்த காட்சியில் பதிவான வாலிபர்களின் புகைப்படம் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    அதில் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் அய்யலூரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் கலையரசன்(24), திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த பாரதி என்பதும், இவர்கள் 2 பேர் மீதும் திருச்சி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து திருச்சியில் பதுங்கி இருந்த கலையரசனை நகர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2½ பவுன் நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பாரதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×