என் மலர்

  செய்திகள்

  கொள்ளை
  X
  கொள்ளை

  திருச்சியில் தட்டச்சு மைய உரிமையாளர் வீட்டில் 23 பவுன் நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சியில் தட்டச்சு மைய உரிமையாளர் வீட்டில் 23 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருச்சி:

  திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி சித்ரா (வயது 43). இவர் அந்த பகுதியில் தட்டச்சு மையம் நடத்தி வருகிறார். தினமும் வீட்டை பூட்டிவிட்டு அதன் சாவியை முன்பக்கத்தில் உள்ள சுவற்றில் மறைத்து வைத்து விட்டு செல்வது வழக்கம்.

  இந்நிலையில் சித்ரா வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு அதன் சாவியை மறைத்து வைத்து விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்ததும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 23 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

  இது குறித்து சித்ரா ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

  முதல் கட்ட விசாரணையில் சித்ரா தினமும் வீட்டு சாவியை எங்கு வைக்கிறார் என்பதை மர்மநபர்கள் நோட்டமிட்டு, அவர் வேலைக்கு சென்றபின் சாவியை எடுத்துவீட்டிற்குள் சென்று நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
  Next Story
  ×