என் மலர்

  செய்திகள்

  இடமாற்றம்
  X
  இடமாற்றம்

  ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி மதுரைக்கு மாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி இடமாறுதல் செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையின் மதுரை மண்டலத்தில் கோவில் நிலப்பிரிவு வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக முத்துமாரி கடந்த 2017-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்தார்.

  இவர் பணியில் விதிமீறி நடந்து கொண்டதாக வருவாய்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சில மாதங்களுக்கு முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதையடுத்து அவர் நீண்டநாள் விடுப்பில் சென்றார். பின்னர் கலெக்டர் வீரராகவராவ் வருவாய் துறை சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு ஏற்பட்டது.

  இதையடுத்து கடந்த மார்ச் மாதத்தில் மீண்டும் பணியில் சேர்ந்தார். தற்போது அவர் ராமநாதபுரத்தில் இருந்து இடமாறுதல் செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையின் மதுரை மண்டலத்தில் கோவில் நிலப்பிரிவு வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  அவருக்கு பதிலாக அரசு நில மீட்பு பிரிவில் இருந்த சிவகாமி ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  Next Story
  ×