search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ பரிசோதனை
    X
    மருத்துவ பரிசோதனை

    வெளியூர்களில் இருந்து வந்த 106 பேருக்கு மருத்துவ பரிசோதனை

    வெளியூர்களில் இருந்து வந்த 8 பேர் உள்பட 106 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சென்னை மட்டுமின்றி மராட்டியம், ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட பிறமாநிலங்களுக்கு வேலைக்காக சென்றனர். ஊரடங்கால் வேலையிழந்து தவித்த அவர்கள், தற்போது சொந்த ஊருக்கு திரும்பி வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வருபவர்களை முகாம்களில் தங்கவைத்து மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் கொரோனா தொற்று இல்லாத நபர்கள் மட்டுமே வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாவட்டத்துக்கு வெளியூர்களில் இருந்து புதிதாக வந்தவர்களை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அவர்களிடம் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதன்மூலம் திண்டுக்கல் மற்றும் பழனியில் தலா 16 பேர், சாணார்பட்டியில் 37 பேர், கன்னிவாடியில் 9 பேர், ஒட்டன்சத்திரம் மற்றும் விருவீட்டில் தலா 5 பேர், சித்தையன்கோட்டையில் 8 பேர் உள்பட 106 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. 
    Next Story
    ×