search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனல்காற்று காரணமாக முகக்கவசம் அணிந்து செல்பவர்கள் (கோப்புப்படம்)
    X
    அனல்காற்று காரணமாக முகக்கவசம் அணிந்து செல்பவர்கள் (கோப்புப்படம்)

    சென்னையில் 2 நாட்களுக்கு வெப்ப காற்று வீசும்- வானிலை அதிகாரி தகவல்

    மேற்கு திசையில் இருந்து காற்று வீசுவதால் சென்னையில் 2 நாட்களுக்கு வெப்ப காற்று வீசும் என்று வானிலை துணை இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னையில் நேற்று 106 டிகிரி வெயில் தாக்கியது. அனல்காற்று அதிகமாக வீசியதால் சாலைகளில் மக்களால் செல்ல முடியவில்லை. வாகனங்களில் சென்றவர்கள் இந்த வெப்பக்காற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இந்த வெப்பக்காற்றும் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை மண்டல வானிலை துணை இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

    புயல் காரணமாக சென்னையில் வடகிழக்கு காற்று வீசியது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. தற்போது. மேற்கு திசையில் இருந்து காற்று வீசுகிறது. இது வெப்பக்காற்றாக வீசுகிறது.

    கடலின் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடுவதால் இதன் தாக்கம் அதிகமாக தெரிகிறது. இந்த சூடான காற்று மேலும் 2 நாட்களுக்கு வீச வாய்ப்புள்ளது. அதன் பின்னர் படிப்படியாக குறையும். இந்த காலத்தில் வெப்பத்தின் தாக்கம் 41 டிகிரி செல்சியஸ் வரை வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×