search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செல்லூர் ராஜு
    X
    அமைச்சர் செல்லூர் ராஜு

    ஊரடங்கு நாட்களில் அம்மா உணவகங்களில் 6 லட்சம் பேருக்கு உணவு - அமைச்சர் செல்லூர்ராஜூ தகவல்

    ஊரடங்கு நாட்களில் மதுரை மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகம் மூலம் 6 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
    மதுரை:

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று ஆய்வு செய்தார்.

    கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் தற்காத்து கொள்ள ஊரடங்கு அமலில் உள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை தடுக்க மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும், சுகாதார துறையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள 12 அம்மா உணவகங்களில் ஏழை மக்களுககு சுவையாக உணவுகள் தயாரித்து வழங்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் நேற்று வரை 6 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. அதில் 2,62,331 பேர் இலவசமாக உணவு சாப்பிட்டுள்ளார்கள்.கொரோனா தடுப்புக்காக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    எனவே தேவையற்ற அலைச்சலை தவிர்க்க வேண்டும். சட்டத்தால் யாரையும் திருத்த முடியாது. மக்களாகவே திருத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் வினய், அரசு ஆஸ்பத்திரி டீன் சங்குமணி, நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×