search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பனியன் நிறுவனத்தில் முக கவசம் அணிந்து பணியாற்றிய பெண் தொழிலாளர்கள்.
    X
    பனியன் நிறுவனத்தில் முக கவசம் அணிந்து பணியாற்றிய பெண் தொழிலாளர்கள்.

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பனியன் நிறுவனங்கள்-தொழிற்சாலைகள் செயல்பட தொடங்கியது

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பனியன் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட தொடங்கியது. தொழிலாளர்கள் முக கவசம் அணிந்து பணியாற்றினர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  சிறு,குறு மற்றும் நடுத்தர, பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.

    ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த தொழிற் சாலைகள் கடந்த மார்ச் மாதம்  24-ந்தேதி மாலை 6 மணியுடன் மூடப்பட்டது. தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் கோவை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட தொடங்கியது. 

    கோவை மாவட்டத்தில் பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், விசைத்தறி, வெட்கிரைண் டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என 60 சதவீதம் தொழிற்சாலைகள் கிராம புறங்களிலும், 40 சதவீதம் தொழிற்சாலைகள் நகர்புறங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இதில் கிராமப்புறங்களை சுற்றி 325 பெரிய தொழில் நிறுவனங்களும், மாநகராட்சி பகுதிகளை சுற்றி சுமார் 100 பெரிய தொழில்நிறுவனங்களும் உள்ளன. கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள 706 ஸ்பின்னிங் மில், 5,200 விசைத்தறி கூடங்கள், 220 தானியங்கி தறிகூடம் உள்பட மொத்தம் 6,120 ஜவுளி தொழில் நிறுவனங்கள் உள்ளன. பவுண்டரி துறையில் 500 தொழில் நிறுவனங்கள் உள்ளன.

    கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள் இன்று காலை வழக்கம் போல் தொடங்கியது. 50 சதவீதம் பணியாளர்களைக் கொண்டு சமூக இடை வெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து பணியாற்றினர்.

    திருப்பூர் மாவட்டத்தில் இன்று 50 சதவீத பனியன் நிறுவனங்கள் செயல்பட தொடங்கியது. உள்ளூர் மற்றும் கம்பெனிகளில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களை கொண்டு இந்த கம்பெனிகள் இயங்கியது. அனைவரும் முக கவசம் அணிந்தபடி பணியாற்றினர்.
    Next Story
    ×