search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிற்சாலைகள் மூடல்"

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
    • சேலம் உள்பட 4 மாவட்டங்களில் கல்மாவு ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் லோடு கிடைக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளன. மேலும் சரக்கு ஆட்டோக்கள், டெம்போக்கள் உள்பட 3 லட்சம் இலகு ரக வாகனங்கள் உள்ளன. இதில் சுமார் 1 லட்சம் லாரிகள் வட மாநிலங்களுக்கும், மற்ற வாகனங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது.

    சேலம் உள்பட 5 மாவட்டங்களில் கார்மெண்ட்ஸ், நூற்பாலை உள்பட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 12-ந்தேதிக்கு முன்பாக ஏராளமான தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

    ஆனால் தீபாவளி பண்டிகை முடிந்து 12 நாட்கள் ஆகியும் வடமாநில தொழிலாளர்கள் இன்னும் தமிழகத்திற்கு திரும்பவில்லை. இதனால் பெரும்பாலான தொழிற்சாலைகளில் இன்னும் பூட்டியே கிடக்கின்றன. அது மட்டுமின்றி மின் கட்டண உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் தொழிற்சாலைளில் உற்பத்தி சரிந்து 40 ஆயிரம் லாரிகள் லோடு கிடைக்காமல் நிறுத்தப்பட்டுள்ளன.

    இது தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் சரக்கு பரிமாற்றம் தடைபட்டுள்ளது. சேலம் உள்பட 4 மாவட்டங்களில் கல்மாவு ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் லோடு கிடைக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஆந்திரா உள்பட வெளி மாநிலங்களுக்கு சென்ற 30 ஆயிரம் லாரிகள் அங்கு பெய்யும் மழையால் லோடு கிடைக்காமல் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி காய்கறி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதால் தினமும் அதனை எடுத்து சென்ற 5 ஆயிரம் லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

    மொத்தமாக மழை மற்றும் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பால் 80 ஆயிரம் லாரிகளும், 30 ஆயிரம் இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரம் தமிழக சரக்கு வாகனங்கள் லோடு கிடைக்காமல் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ஏற்கனவே டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள், இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பிரச்சனைகளால் உரிமையாளர்களுக்கு வாடகை இழப்பு ஏற்பட்டு வாகனங்கள் பெயரில் வாங்கிய கடனுக்கு மாத தவணை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக புலம்பி வருகிறார்கள்.

    எனவே கடன் வழங்கிய நிதி நிறுவனங்கள், வங்கிகள் தவணையை வசூலிப்பதில் கெடுபிடிகளை தவிர்க்க வேண்டும், மத்திய மாநில அரசுகள் லாரி தொழிலை நசிவில் இருந்து காக்க காலாண்டு வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×