என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  மேட்டுப்பாளையம் அருகே மில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேட்டுப்பாளையம் அருகே வேறு பெண்ணுடனான தொடர்பு குறித்து மனைவி கண்டித்ததால் மில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
  மேட்டுப்பாளையம்:

  மேட்டுப்பாளையம் சுக்குக் காபி கடை வெல்ஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது29) மில் தொழிலாளி. இவரது மனைவி அருணேஸ்வரி (27). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கார்த்திக் தனது குடும்பத்தினருடன் தென்காசி மாவட்டம் சிந்தாமணியில் குடியிருந்த போது அரிசி கடத்தல் வழக்கில் கைதாகி சிறை சென்றார். அவர் வெளியில் வந்த பின்பு தென்காசியில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.

  இதனால் அங்கிருந்து கடந்த 6 மாதத்துக்கு முன்பு மேட்டுப்பாளையம் சுக்குக் காபி கடை வெல்ஸ்புரம் பகுதியில் குடும்பத்தினருடன் வந்து குடியேறினார். பின்னர் அருகே உள்ள மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கார்த்திக் அடிக்கடி அந்தப் பெண்ணுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்தது.

  சம்பவத்தன்றும் கார்த்திக் மீண்டும் அந்தப் பெண்ணுடன் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதனை மனைவி கண்டித்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கார்த்திக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×