search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சித்தையன்கோட்டையில் போதை மாத்திரை தின்ற வாலிபர் மயக்கம்

    சித்தையன் கோட்டையை சேர்ந்த வாலிபர் போதை மாத்திரை தின்ற மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆத்தூர்:

    கொரோனா பரவலால், தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சில வாரங்களாக, டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் அடைக்கப்பட்டுள்ளன. மது பிரியர்கள், குக்கிராமங்களில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை தேடி அலைகின்றனர். இவற்றை கட்டுப்படுத்த போலீசாரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சித்தையன் கோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளியான மாற்றுத்திறனாளி மகேந்திரன் (வயது 25) கடந்த 24-ந்தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக அணைப்பட்டி சென்றிருந்தார்.

    அன்று மாலை வீடு திரும்பிய மகேந்திரன் மயங்கி சுருண்டு விழுந்தார். உடனே திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவரது உடல்நிலை நேற்று கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து மாவட்ட எஸ்.பி. சக்திவேல் உத்தரவின்படி, போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. சீமைச்சாமி, மதுவிலக்கு டி.எஸ்.பி. பொன்னுச்சாமி, கொரோனா பிரிவுக்கான சிறப்பு டி.எஸ்.பி. சரவணன் ஆகியோரைக்கொண்ட போலீசார் சித்தையன் கோட்டையில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    விசாரணையில் மகேந்திரன் போதை மாத்திரை தின்றது தெரிய வந்தது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×