என் மலர்

  செய்திகள்

  முட்டை
  X
  முட்டை

  நாமக்கல்லில் முட்டை உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனோ வைரஸ் பாதிப்பை தொடர்ந்து நாமக்கல்லில் முட்டை தொழில் கடுமையாக விழ்ச்சி அடைந்துள்ளது.
  நாமக்கல்:

  நாமக்கல்லில் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது முட்டை தொழில். இங்கு 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் மூலம் நாள் ஒன்றுக்கு 4 கோடி முட்டைகள் உற்பத்தி  செய்யப்பட்டு தமிழகம்,  வெளி மாநிலத்திற்கு முட்டை விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் கொரோனோ வைரஸ் பாதிப்பை தொடர்ந்து முட்டை தொழில் கடுமையாக விழ்ச்சி அடைந்தது. 

  இதனால் 15 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்தது.  இதனையடுத்து கோழிப்பண்ணையாளர்கள் கோழிகளுக்கு தீவனங்களை குறைத்து முட்டை உற்பத்தியை குறைத்தனர். இதனால் நாள் ஒன்றுக்கு 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டு 2 கோடி முட்டைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது ஊரடங்கு உத்தரவால் வீடுகளுக்குள் பொதுமக்கள் முடங்கியதால் முட்டை நுகர்வு அதிகரித்ததை தொடர்ந்து முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்தது. ரூ.1.90&க்கு விற்பனை செய்த நிலையில் படிப்படியாக உயர்ந்து ரூ4.50-க்கு வந்தது. தற்போது கோழிகளுக்கு தீவனம் கொடுப்பதை பண்ணையாளர்கள் அதிகரித்ததை தொடர்ந்து முட்டை உற்பத்தி நாள் ஒன்றுக்கு 3.50 கோடி உற்பத்தியாக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக முட்டை விலை 4.30 காசிலிருந்து 3.80 காசுகளாக குறைந்துள்ளது. ஒரேநாளில் 50 காசுகள் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

  இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணி கூறியதாவது:-

  உற்பத்தி அதிகரிப்பால் முட்டை விலை ரூ 3.80-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு முட்டை விற்க முடியவில்லை ரூ 3-க்கு மட்டுமே முட்டை விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் போதிய போக்குவரத்து இல்லாததால் 50 சதவீத முட்டைகள் விற்பனையாகவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முட்டை உற்பத்தி குறைந்துள்ளது என்றார்.
  Next Story
  ×