search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    திண்டுக்கல் பகுதியில் 200 வாகனங்கள் மூலம் காய்கறி விநியோகம்

    கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக திண்டுக்கல் பகுதியில் 200 வாகனங்கள் மூலம் காய்கறி விநியோகம் செய்யப்படுகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல்லில் முதற்கட்டமாக 70 வாகனங்கள் மூலம் காய்கறி விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இருப்பினும் பொதுமக்கள் அதிக அளவில் பகுதிகளில் நண்பகல் வரை சுற்றி திரிந்து வருகின்றனர். இதை தடுப்பதற்காக நாளை முதல் காய்கனிகள் விற்பனை செய்வதற்கு கூடுதலாக 130 வாகனங்கள் இயக்கப்பட உள்ளது. திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு இந்த காய்கறி விற்பனை வாகனம் காலை 6 மணி முதல் 11 மணி வரை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கென தனித்தனியே ஒவ்வொரு வாகனங்களுக்கும் டோக்கன் சிஸ்டம் ஏற்படுத்தப்பட்டு வார்டு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வார்டுகளில் மட்டுமே அந்த வாகனம் காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும். வாரத்திற்கு இருமுறை அனுமதி கொடுக்கப்பட்ட டோக்கனை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×