என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  குரங்குகள் விஷம் வைத்து சாகடிப்பு- விவசாயி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேச்சிப்பாறை அருகே 3 குரங்குகள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டது. அன்னாசி பழங்களை நாசப்படுத்திய ஆத்திரத்தில் விஷம் வைத்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
  குலசேகரம்:

  பேச்சிப்பாறை அருகே மல விளையை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 52), விவசாயி. இவர் தாணிக்குண்டுவில் ரப்பர் மறு நடவு செய்துள்ள பகுதியை குத்தகைக்கு எடுத்து ஊடுபயிராக அன்னாசி பழம் நடவு செய்து இருந்தார்.

  அன்னாசி பழம் அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் குரங்குகள் புகுந்து அன்னாசி பழங்களை நாசப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த பகுதியில் 3 குரங்குகள் இறந்து கிடந்தன.

  இதுபற்றி தகவல் அறிந்ததும், மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் மற்றும் அலுவலர்கள் ஷாநவாஸ்கான், கணேசன், ராஜகோபால் ஆகியோர் அங்கு விரைந்து சென்று குரங்குகளின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக குலசேகரம் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அந்த குரங்குகள் விஷம் தின்றதால் இறந்தது தெரிய வந்தது.

  மேலும் அன்னாசி பழங்களை நாசப்படுத்தியதால் விவசாயி சுந்தர்ராஜ் ஆத்திரமடைந்து விஷம் வைத்து 3 குரங்குகளை சாகடித்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து சுந்தர்ராஜை வன அதிகாரிகள் கைது செய்தனர்.
  Next Story
  ×