என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  சாத்தான்குளம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாத்தான்குளம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.


  சாத்தான்குளம்:

  சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்களம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி தங்கசெல்வி (வயது 37).  கடந்த 20-ந்தேதி தங்கசெல்வி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு அதே ஊரை சேர்ந்த கட்டிடதொழிலாளியான முருகன் (41) என்பவர் வந்தார். முருகன், தங்கசெல்வியை மானபங்கப்படுத்த முயன்றுள்ளார். இதனால் அவர் கத்தி கூச்சலிட்டார்.  தங்கசெல்வி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து முருகனை விரட்டினர்.  

  இதில் ஆத்திரம் அடைந்த  முருகன், தங்கசெல்வியை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து சென்றார். 

  இது குறித்து தங்கசெல்வி சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.
  Next Story
  ×