search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நபர் கைது"

    • பெரியசாமி வெள்ளையனிடம் எனது கூலி பணமும், தங்கை கூலி பணமும் கேட்டுள்ளார்.
    • பீர் பாட்டிலை உடைத்து பெரியசாமியின் கழுத்து, கை உட்பட பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார்.

    பவானி:

    நாமக்கல் மாவட்டம் வளையக்காரன் பாளையம் தட்டான் குட்டை பகுதியில் வசிப்பவர் பெரியசாமி (வயது 40). கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் லேத்து வேலை மற்றும் கட்டிட வேலைக்கு சென்று வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் பெரிய சாமி மற்றும் அவரின் சகோதரி தனலட்சுமி ஆகிய இருவரும் வடிவேல் என்ற வெள்ளையன் என்பவரு டன் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளனர்.

    செய்த வேலைக்கு பெரிய சாமி பணம் கேட்டுள்ளார். இந்நிலையில் வெள்ளையன் நீ மீண்டும் என்னிடம் வேலைக்கு வந்தால் தான் பணம் கொடுக்க முடியும் என கூறினார்.

    இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் பவானி அந்தியூர் மெயின் ரோட்டில் உள்ள மதுபான கடை ஒன்றில் மது அருந்திய இருவரும் அருகில் இருந்த கோவிலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது மீண்டும் பெரியசாமி வெள்ளையனிடம் எனது கூலி பணமும், தங்கை கூலி பணமும் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த வெள்ளையன் அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து பெரியசாமியின் கழுத்து, கை உட்பட பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார்.

    இதையடுத்து இரத்த வெள்ளத்தில் கிடந்த பெரி யசாமியை அவ்வழியாகச் சென்றவர்கள் மீட்டு பவானி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பெரியசாமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெருந்து றை யில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனு ப்பி வைத்த னர்.

    இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீ சார் விசா ரணை மேற்கொ ண்டு வடிவேல் என்ற வெள்ளை யனை கைது செய்து பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • படுகாயம் அடைந்த ரகுமத்துல்லா சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • கரூரில் பதுங்கி இருந்த சந்தோசை போலீசார் கைது செய்தனர்.

    கோவை,

    கோவை குனியமுத்தூர் பாரதிநகரை சேர்ந்தவர் ரகுமத்துல்லா (வயது 29). பெயிண்டர்.

    இவரது மனைவி தஸ்லிமா. இந்த தம்பதியினருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

    ரகுமத்துல்லா மீது வழிப்பறி, செல்போன் திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. நேற்று இரவு ரகுமத்துல்லா செல்வபுரம் பேரூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாருக்கு தனது நண்பர் மணிகண்டன்(23) என்பவருடன் சென்று மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அவர்களது அருகே செல்வபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்(26) என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தோஷின் நண்பர் ஒருவரது செல்போன் காணாமல் போனது. இந்த செல்போனை ரகுமத்துல்லா எடுத்திருக்கலாம் என்று சந்தோஷ் அவரிடம் கேட்டு வாக்குவாதம் செய்தார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    பின்னர் பாரில் இருந்து வெளியே வந்த ரகுமத்துல்லாவை ஆத்திரம் அடைந்த சந்தோஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் குத்தினார். தடுக்க முயன்ற மணிகண்டனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த ரகுமத்துல்லா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    பின்னர் அங்கிருந்து சந்தோஷ் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து வந்த செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காயம் அடைந்த மணிகண்டன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து செல்வபுரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சந்தோசை தேடி வந்தனர். கரூரில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

    • விஜய் இடையர்பாளையம் தெற்கு மண்டல அலுவலகத்திற்கு எதிராக பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் தொழில் நடத்தி வருகிறார்.
    • குனியமுத்தூர் போலீசார் ராஜேஷ்குமாரை கைது செய்தனர். நந்தகுமாரை தேடி வருகின்றனர்.

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்தூரை அடுத்த பி. கே. புதூர் அம்மன் காலணியை சேர்ந்தவர் விஜய் (24). இவர் இடையர்பாளையம் தெற்கு மண்டல அலுவலகத்திற்கு எதிராக பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் தொழில் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று அப்பகுதியில் இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, சுகுணாபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார், நந்தகுமார் ஆகிய 2 பேர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

    போக்குவரத்து நெரிசல் காரணமாக உரசும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் முற்றிய நிலையில், ராஜேஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜய் மீது கிழித்தார். சம்பவம் அறிந்த குனியமுத்தூர் போலீசார் ராஜேஷ்குமாரை கைது செய்தனர். நந்தகுமாரை தேடி வருகின்றனர்.  

    ×