என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் வாலிபரை கத்தியால் குத்திய நபர் கைது
- விஜய் இடையர்பாளையம் தெற்கு மண்டல அலுவலகத்திற்கு எதிராக பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் தொழில் நடத்தி வருகிறார்.
- குனியமுத்தூர் போலீசார் ராஜேஷ்குமாரை கைது செய்தனர். நந்தகுமாரை தேடி வருகின்றனர்.
குனியமுத்தூர்,
கோவை குனியமுத்தூரை அடுத்த பி. கே. புதூர் அம்மன் காலணியை சேர்ந்தவர் விஜய் (24). இவர் இடையர்பாளையம் தெற்கு மண்டல அலுவலகத்திற்கு எதிராக பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் தொழில் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று அப்பகுதியில் இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, சுகுணாபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார், நந்தகுமார் ஆகிய 2 பேர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
போக்குவரத்து நெரிசல் காரணமாக உரசும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் முற்றிய நிலையில், ராஜேஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜய் மீது கிழித்தார். சம்பவம் அறிந்த குனியமுத்தூர் போலீசார் ராஜேஷ்குமாரை கைது செய்தனர். நந்தகுமாரை தேடி வருகின்றனர்.
Next Story






