வேலை செய்த கூலியை கேட்ட நபரை பீர் பாட்டிலால் குத்திய நபர் கைது

பெரியசாமி வெள்ளையனிடம் எனது கூலி பணமும், தங்கை கூலி பணமும் கேட்டுள்ளார்.பீர் பாட்டிலை உடைத்து பெரியசாமியின் கழுத்து, கை உட்பட பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார்.
வேலை செய்த கூலியை கேட்ட நபரை பீர் பாட்டிலால் குத்திய நபர் கைது
Published on

பவானி:

நாமக்கல் மாவட்டம் வளையக்காரன் பாளையம் தட்டான் குட்டை பகுதியில் வசிப்பவர் பெரியசாமி (வயது 40). கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் லேத்து வேலை மற்றும் கட்டிட வேலைக்கு சென்று வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் பெரிய சாமி மற்றும் அவரின் சகோதரி தனலட்சுமி ஆகிய இருவரும் வடிவேல் என்ற வெள்ளையன் என்பவரு டன் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளனர்.

செய்த வேலைக்கு பெரிய சாமி பணம் கேட்டுள்ளார். இந்நிலையில் வெள்ளையன் நீ மீண்டும் என்னிடம் வேலைக்கு வந்தால் தான் பணம் கொடுக்க முடியும் என கூறினார்.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் பவானி அந்தியூர் மெயின் ரோட்டில் உள்ள மதுபான கடை ஒன்றில் மது அருந்திய இருவரும் அருகில் இருந்த கோவிலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது மீண்டும் பெரியசாமி வெள்ளையனிடம் எனது கூலி பணமும், தங்கை கூலி பணமும் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த வெள்ளையன் அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து பெரியசாமியின் கழுத்து, கை உட்பட பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார்.

இதையடுத்து இரத்த வெள்ளத்தில் கிடந்த பெரி யசாமியை அவ்வழியாகச் சென்றவர்கள் மீட்டு பவானி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பெரியசாமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெருந்து றை யில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனு ப்பி வைத்த னர்.

இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீ சார் விசா ரணை மேற்கொ ண்டு வடிவேல் என்ற வெள்ளை யனை கைது செய்து பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com