என் மலர்
செய்திகள்

பெண் பிணம்
ஜமுனாமரத்தூர் அருகே கிணற்றில் பெண் பிணம்
ஜமுனாமரத்தூர் அருகே கிணற்றில் பெண் பிணம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை:
ஜமுனாமரத்தூர் அருகே உள்ள மேல்விளாமூச்சு கிராமத்தில் ஆண்டி என்பவருடைய விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத பெண் பிணம் கிடப்பதாக ஜமுனாமரத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் மிதந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் கிணற்றில் பிணமாக கிடந்தவர், கீழ்விளாமூச்சு பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மனைவி மின்னல்கோடி (வயது 35) என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்னல்கோடி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story