search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    சென்னையில் காய்கறி விலை சரிவு

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மழை நன்றாக பெய்துள்ளதால் காய்கறி விளைச்சல் அதிகரித்துள்ளது. தை பிறந்த பிறகு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது.
    சென்னை:

    சென்னையில் கடந்த மாதம் வரை காய்கறி விலை உச்சத்தில் இருந்தது. வெங்காயம் கிலோ 100 ரூபாயை தாண்டியது. சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய் வரை உயர்ந்தது.

    முருங்கைக்காய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து 1 காய் ரூ.40 வரை விற்பனையானது.

    ஆனால் இப்போது அனைத்து காய்கறி விலையும் மிகவும் குறைந்து விட்டது.

    சிந்தாதிரிப்பேட்டை காய்கறி மார்க்கெட்டில் இன்றைய காய்கறி விலை கிலோவுக்கு வருமாறு:-

    தக்காளி - ரூபாய் 15
    கத்தரிக்காய் - 20
    வெண்டைக்காய் - 20
    வெங்காயம் - 25
    சின்ன வெங்காயம் - 50
    அவரைக்காய் - 25
    கேரட் - 30
    பீன்ஸ் - 40
    முள்ளங்கி - 10
    உருளை - 28
    கோஸ் - 10
    முருங்கைக்காய் 1 - 5
    மல்லி இலை 1 கட்டு - 5
    கீரை 2 கட்டு - 10
    சேனை கிழங்கு - 20
    சேமக்கிழங்கு - 40
    கோவைக்காய் - 20
    புடலங்காய் - 20

    விலை சரிவு பற்றி சிந்தாதிரிப்பேட்டை காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் ரகுபதி கூறுகையில் இந்த ஆண்டு மழை நன்றாக பெய்துள்ளதால் தமிழ்நாட்டில் காய்கறி விளைச்சல் அதிகரித்துள்ளது. தை பிறந்த பிறகு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது.

    ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் காய்கறிகள் வரும் காரணத்தால் அனைத்து காய்கறிகளின் விலையும் மலிந்து விட்டது.

    Next Story
    ×