search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன்
    X
    செல்போன்

    பள்ளி மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நீதிபதி பேச்சு

    பள்ளி மாணவ-மாணவிகள் வீடுகளில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நீதிபதி கூறினார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட அளவில் இளம் செஞ்சிலுவை சங்கத்தில் சிறந்து விளங்கிய இளம் செஞ்சிலுவை மாணவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் சிறந்த இளம் செஞ்சிலுவை சங்க பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன் தலைமை தாங்கினார். கல்வி மாவட்ட அலுவலர்கள் மாரிமீனாள் (பெரம்பலூர்), குழந்தை ராஜன் (வேப்பூர்) இந்தியன் செஞ்சிலுவை சங்க பெரம்பலூர் மாவட்ட செயலாளா ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியர் கஜபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பெரம்பலூர் மாவட்ட நீதிபதியும், பெரம்பலூர் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவருமான கருணாநிதி சிறந்து விளங்கிய இளம் செஞ்சிலுவை மாணவர்களுக்கும், சிறந்த கவுன்சிலர்களுக்கும் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் விருது வழங்கி பாராட்டி பேசும்போது, பள்ளி மாணவ-மாணவிகள் வீடுகளில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கடத்தலில் இருந்து மாணவிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். என்றார்.

    சிறந்த இளம் செஞ்சிலுவை சங்க பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன் விருது வழங்கி பாராட்டி பேசுகையில், மாணவர்கள் சிறந்த சேவை செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார். முன்னதாக வேப்பூர் கல்வி மாவட்ட இளம் செஞ்சிலுவை சங்க கன்வீனர் ராதாகிருஷ்ணன் 2019-20 ஆண்டின் சங்கத்தின் செயல்பாடுகளை விளக்கிக் கூறினார். பெரம்பலூர் மாவட்ட கன்வீனர் மாயகிருஷ்ணன் இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தின் நூற்றாண்டு விழா செயல்பாடுகளை விளக்கி கூறினார். முன்னதாக பெரம்பலூர் கல்வி மாவட்ட பொருளாளர் கருணாகரன் வரவேற்றார். முடிவில் பெரம்பலூர் கல்வி மாவட்ட இணை கன்வீனர் ஜோதிவேல் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை மண்டல அலுவலர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×