என் மலர்

  செய்திகள்

  பால் உற்பத்தியாளர்
  X
  பால் உற்பத்தியாளர்

  மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய தேர்தல் தேதி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 27-ம் தேதி நடைபெறும்.
  சென்னை:

  மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கான தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

  பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட தருமபுரி, தூத்துக்குடி, தேனி, கரூர், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் மற்றும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, திருச்சி, மதுரை, விழுப்புரம், வேலூர், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய 8 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் ஆகமொத்தம் 14 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கான புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள், துணைத்தலைவர், தலைவர் தேர்தலுக்கான தேர்தல் திட்டம் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. 

  வாக்குப்பெட்டி

  இச்சங்கங்கள் தொடர்பான கூட்டுறவு மாவட்ட தேர்தல் அலுவலர்கள் இதற்கான தேர்தல் அறிவிப்பினை வெளியிடுவர். அதன்படி மேற்காண் 14 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களில் 238 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. அவற்றில் 70 இடங்கள் பெண்களுக்கும், 42 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

  இதற்கான வேட்புமனுத் தாக்கல் 27.02.2020 அன்றும், பரிசீலனை 28.02.2020 அன்றும் நடைபெறும். மனுக்களை திரும்பப்பெறுதல் மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் 29.02.2020 அன்று வெளியிடப்படும். போட்டியிருப்பின் 04.03.2020 அன்று வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவித்தல் 05.03.2020 அன்று நடைபெற உள்ளது.

  நிர்வாகக்குழு உறுப்பினர்களின் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் 09.03.2020 அன்று சங்கத்தின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல்கள் நடைபெறும்.

  இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 
  Next Story
  ×