search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
    X
    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

    முறைகேடுகளை தடுக்க தேர்வில் புதிய மாற்றங்கள் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

    டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க பல்வேறு மாற்றங்களை டி.என்.பி.எஸ்.சி இன்று அறிவித்துள்ளது
    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வு முறைகேடு பற்றி தினமும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.

    இந்நிலையில், தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க ஆறு புதிய மாற்றங்களை டி.என்.பி.எஸ்.சி இன்று அறிவித்துள்ளது. 

    ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை தவிர்க்க தேர்வர்களுக்கு ஆதார் எண் கட்டாயம். முறைகேடுகளை முன்கூட்டியே அறிய உயர் தொழில்நுட்பத் தீர்வு வரும் தேர்வுகளில் நடைமுறைப்படுத்தப்படும்.

    3 தேர்வு மையங்களை தேர்வு செய்யலாம். தேர்வர்களுக்கான மையங்களை தேர்வாணையமே ஒதுக்கீடு செய்யும். தேர்வு முடிந்த பின்னர் விடைத்தாள் நகல்களை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

    கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் விவரம் அன்றைய தினமே இணைய தளத்தில் வெளியிடப்படும் உள்ளிட்ட மாற்றங்களை டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
    Next Story
    ×