என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  ரெட்டியார்பாளையத்தில் அரசு அதிகாரி வீட்டில் ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவை ரெட்டியார்பாளையத்தில் அரசு அதிகாரி வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
  புதுச்சேரி:

  புதுவை ரெட்டியார்பாளையம் பெருமாள் ராஜா கார்டன் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பெலிக்ஸ். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவரது மனைவி செக்யூரா (வயது 70).

  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெலிக்ஸ் இறந்து போனார். இதன் பின்னர் செக்யூரா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

  இதற்கிடையே செக்யூரா வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த ஜெயா நகரை சேர்ந்த அமுதா என்ற பெண் கடந்த 3 மாதங்களாக வீட்டு வேலைக்கு வரவில்லை.

  இந்த நிலையில் செக்யூரா தனது வீட்டின் பீரோவில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்தார். அப்போது 20 பவுன் நகை மாயமாகி இருந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். நகையை யாரோ கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

  நகை கொள்ளை போய் இருந்த நிலையில் வீட்டு வேலை செய்து வந்த அமுதா திடீரென வேலையை விட்டு நின்றதால் அவர் நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என செக்யூரா சந்தேகம் அடைந்தார்.

  இதுகுறித்து அவர் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அமுதாவை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×