search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி
    X
    டிஎன்பிஎஸ்சி

    குரூப்-4 தேர்வு முறைகேடு: ராமேஸ்வரம், கீழக்கரை தாசில்தார்களிடம் சிபிசிஐடி விசாரணை

    குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தாசில்தார்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
    ராமேஸ்வரம்:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. 

    அதில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 40 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள். அவர்களில் பலர் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களாக  இருந்ததால், மற்ற தேர்வர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களை அழைத்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    சிபிசிஐடி

    அதன்பின்னர் இந்த முறைகேடு தொடர்பாக டிஜிபி திரிபாதியிடம் டிஎன்பிஎஸ்சி புகார் அளித்தது. இந்த புகாரை சிபிசிஐடி போலீசாருக்கு டிஜிபி திரிபாதி அனுப்பி வைத்தார். அதன்படி சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று விசாரணையை தொடங்கி உள்ளனர். 

    முதல்கட்டமாக ராமேஸ்வரம், கீழக்கரை தாசில்தார்களிடம் விசாரணை நடத்தினர். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    அடுத்தகட்டமாக ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் தேர்வு எழுதியவர்களில், விசாரணை வளையத்தில் உள்ள நபர்கள், அந்த தேர்வு மையங்களில் பணிபுரிந்த அலுவலர்கள் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். 
    Next Story
    ×