என் மலர்
செய்திகள்

தென்னை மரம்
கல்லாவி அருகே தேங்காய் பறிக்க மரத்தில் ஏறிய வாலிபர் பலி
கல்லாவி அருகே மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருந்த தொழிலாளி எதிர்பாராத விதமாக கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அடுத்த கோழி நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (வயது25). இவர் நேற்று காலை தனது மாமா அர்ச்சுனனின் தேங்காய் மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக தவறி மரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கணபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது குறித்து கல்லாவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். பழனிசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story