search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலியோ சொட்டு மருந்து முகாம்
    X
    போலியோ சொட்டு மருந்து முகாம்

    வருகிற 19-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்- மதுரை மாநகராட்சி ஏற்பாடு

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட அதே இடங்களில் இந்த ஆண்டும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    மதுரை:

    குழந்தை செல்வங்களை தாக்கி உடலை ஊனமாக்கும் கொடிய இளம்பிள்ளைவாத நோயை அறவே ஒழிக்கும் பொருட்டு கடந்த 24 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்ற தீவிர இளம்பிள்ளைவாத நோய் ஒழிப்பு முகாம்களைப்போல போலியோ சொட்டு மருந்து முகாம் வருகின்ற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட அதே இடங்களில் இந்த ஆண்டும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த போலியோ சொட்டு மருந்து 19-ந்தேதி அன்று இந்தியா முழுவதும் வழங்கப்படுகிறது.

    இந்த சொட்டு மருந்து தரம் வாய்ந்தது என உலக சுகாதார நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து கொடுப்பதால் பக்க விளைவுகள் ஏதும் உண்டாகாது.

    எனவே உங்கள் வீட்டில் உள்ள 5 வயதிற்குட்பட்ட எல்லா குழந்தைகளையும் இதற்கு முன்பு எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும் இம்முறையும் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், மகப்பேறு மனைகள், மருந்தகங்கள், சத்துணவுக் கூடங்கள், பள்ளிகள் மற்றும் இதற்கென அமைக்கப்பட்டு உள்ள போலியோ சொட்டு மருந்து முகாம்களில் ஏதாவது ஒன்றிற்கு தவறாது அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்தினை இலவசமாக பெற்று உங்கள் குழந்தை செல்வங்களை என்றென்றும் இளம்பிள்ளை வாதம் என்னும் கொடிய நோய் தாக்காமல் காத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×