
சென்னையில் சேகரிக்கப்படும் மறுபயன்பாட்டு பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றுக்கடை திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.
அதன்படி பெசன்ட்நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு சொந்தமான சமுதாய நலக்கூடத்தில் மறுபயன்பாட்டு பொருட்கள் சந்தை நேற்று மதியம் தொடங்கியது. இன்று மாலை 6 மணி வரை இந்த சந்தை நடைபெற உள்ளது.
இந்த சந்தையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள மீண்டும் பயன்படுத்தக் கூடிய பழைய பொருட்களை விற்பனைக்கு வைத்தனர். புத்தகங்கள், ஆடைகள், வீட்டு உபகரணங்கள், மின்னணு பொருட்கள், மரச் சாமான்கள், பொம்மைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், குடை, மழை கோட், பைகள், சூட்கேஸ், சைக்கிள், செயற்கை ஆபரணங்கள், விளையாட்டு பொருட்கள், எலக்ட்ரானிகள் பொருட்கள், பர்னிச்சர்களை விற்பனைக்கு வைத்தனர்.

இங்கிருந்த பொருட்களின் விலை ரூ.10 முதல் ரூ.200 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நேற்று ஒரே நாளில் 1800 பொருட்கள் மொத்தம் ரூ.22 ஆயிரத்துக்கு விற்பனையானது.
இந்த சந்தையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களை நன்கொடையாகவும் வழங்கலாம். இன்று மாலை 6 மணி வரை இந்த சந்தை நடக்கிறது.
இந்த பழைய பொருட்கள் சந்தை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது.